×

மிரட்டும் கொரோனா வைரஸ்; உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 42.19 கோடியாக உயர்வு; 58.91 லட்சம் பேர் உயிரிழப்பு

ஜெனீவா: உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42.19 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 கோடியே 19 லட்சத்து 44 ஆயிரத்து 104 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 95 லட்சத்து 59 ஆயிரத்து 746 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 34 கோடியே 64 லட்சத்து 92 ஆயிரத்து 418 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 58 லட்சத்து 91 ஆயிரத்து 940 பேர் உயிரிழந்துள்ளனர்….

The post மிரட்டும் கொரோனா வைரஸ்; உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 42.19 கோடியாக உயர்வு; 58.91 லட்சம் பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Geneva ,China ,Wuhan ,
× RELATED கொரோனா பரவல் குறித்து முதலில் தகவல்...